Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது – 274 இறப்புக்களும் பதிவு



கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 768 பேரும் சவுதி அரேபியா மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 2  பேரும் அதில் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை – பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 51 ஆயுிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 189 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 47 ஆயிரத்து 215 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 7 ஆயிரத்து 700 கொரோனா நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மல்லவகெதர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது கொரோனா தொற்று உறுதியானவராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியாவினால் குருதி விஷமானமை, அதிக நீரிழிவு என்பனவாகும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments