Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானமையை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி மரணித்தார்.



கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானமையை அடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.

கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரணால பகுதியை சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர் நேற்று முன்தினம் மரணித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்று உறுதியானமையை அடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மரணித்தார்.

கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments