Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீள ஆரம்பிக்கப்படும் ரயில் சேவைகள்


கொரோனா காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் நாளை (12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நீண்ட காலத்திற்கு பின்னர் வவுனியா-பெலியத்த புகையிரதம் வழமை போல காலை 03:30 மணிக்கு புறப்படவுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீண்டும்  தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை  ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்கிசை – காங்கேசன்துறை – யாழ்தேவி ரயில், கொழும்பு – காங்கேசன்துறை – உத்தரதேவி ரயில் ,கொழும்பு கோட்டை – பதுளை பொடிமெனிக்கே ரயில், கோட்டை – கண்டி,மருதானை – பெலிஅத்த,மாத்தறை – கொழும்பு உள்ளிட்ட ரயில் சேவைகள் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மேலும் அனைத்து ரயில் சேவைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments