Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை முள்ளிவாய்கால் நினைவு தூபிக்கு மீள அடிக்கல்


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்து அப்புறபடுத்தபட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அதே இடத்தில் அரச அங்கீகாரத்துடன் மீள நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று காலை நாட்டப்பட்டது.

நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் சட்டபூர்வமாக நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நினைவுத் தூபியை மீண்டும் அதே இடத்தில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, துணைவேந்தர் தலைமையில், உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேநேரம், உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு, துணைவேந்தர் கஞ்சி வழங்கி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

No comments