பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு பிரதேசத்தினை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இரணைதீவு பிரதேசத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படவுள்ள கடலட்டை பண்ணைக்கான பூர்வாங்க வேலைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் . மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கையிலேயே முதன்முதலாக நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கியதாக சுமார் 4 கோடி ரூபாய் தனியார் முதலீட்டில் இரணைதீவு பிரதேசத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணை செயற்பாட்டில், கடற்றொழில் அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நக்டா எனப்படுகின்ற தேசிய நீர்வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி அதிகார சபை, தனியார் முதலீட்டாளர்கள், இரணைதீவு கடலட்டை வளர்ப்போர் சங்கம் ஆகிய 3 தரப்புக்கள் சம்மந்தப்பட்டுள்ளன.குறித்த மூன்று தரப்பினருக்குமான பொறுப்புக்கள் வரையறுக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
குறித்த கடலட்டை பண்ணை, இரணைதீவு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 83 கடற்றொழிலாளர்களுக்கு தலா 01 ஏக்கர் வீதம் பகிர்தளிக்கப்பட்டுள்ள நிலையில்இ கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வது உட்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சுமார் 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.குறித்த கடல் பிரதேசத்தினை சம்மந்தப்பட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான சட்ட ரீதியான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வேலைகளும் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்னும் ஒரிரு மாதங்களுக்குள் குறித்த திட்டம் ஆரம்ப்பிக்கப்படும் எனநான் நம்புகின்றேன்
இங்கு கடலட்டை மாத்திரமன்றி மீன் வளர்ப்பினையும் மேலதிக வருமானமாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தில் இரணைதீவு பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலளார்களுக்கு முழுமையாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இது இரணைதீவு மக்களின் வாழ்வில் இந்தத் திட்டம் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
இரணைதீவு பிரதேசத்தினை தனியார் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புடன் வளங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றுவதுடன் சிறந்த சுற்றுலாத் தளமாகவும் மாற்ற வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்' என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.









No comments