துருக்கி , Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN,) போயிங் 777 வகை சரக்கு விமானம் இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் Almaty விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்த சிறிது நேரத்தில் பறவைக் கூட்டதுடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும் (flight nose) , உடல் பகுதியிலும் சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து விமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார். இதன்பின் அனுமதியை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி ( fuel dumping) செய்து விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.










No comments