இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை க்ளெண்ட்ஹோர்ன் வீதியில் குறித்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 2,600 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் வீதிகள் மூடப்பட்டதுடன் நகர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின்போது, 1942 மே மாதமளவில் பேடெக்கர் தாக்குதலின்போது ஜேர்மன் படைகளினால் குறித்தவகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.







No comments