துணியினால் தைக்கப்பட்ட 226 மில்லியன் முகக்கவசங்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வகை முகக்கவசங்கள் துணியால் தைக்கப்பட்டதாகவும், 50 தடவைகள் வரை துவைத்து பயன்படுத்தலாம் எனவும் தேவையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை முகக்கவசங்கள் குறிப்பாக முகக்கவசம் ஒன்றை வாங்கமுடியாதவர்களுக்காக தயாரிக்கப்பட உள்ளது.
மாணவர்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவ சிகிச்சை உதவியுடன் வாழ்பவர்களுக்கு இந்த முகக்கவசம் வழங்கப்பட உள்ளது.







No comments