ஓரு நாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அதற்கு அந்நாட்டின் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் டிலும் அமுனுகம மேலும் கூறியுள்ளதாவது, “நாளை நாட்டில் குண்டுவெடித்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் முப்படைகளின் தளபதியுமே பொறுப்பேற்கவேண்டும். இது கசப்பான யதார்த்தமாகும்.
அந்தவகையில் இந்த விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் பொருந்தும். எனவே ஜனாதிபதி ஆணைக்குழு இதனை தெளிவுபடுத்தவேண்டியதில்லை.
மேலும், அவ்வேளை நாட்டின் தலைவராகயிருந்தவரையே பொறுப்பாளியாக்கவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்







No comments