க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை மார்ச் முதலாம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இரு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார்.
இதற்கிடையில், பரீட்சை அனுமதி அட்டைகளில் தவறுகள் இருந்தால் திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று மாற்றுவதற்கு பரீட்சாத்திகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி பெயர் மாற்றம், பாடத்தில் அல்லது பரீட்சை எழுதும் மொழியை மாற்றம் செய்ய பரீட்சைகள் திணைக்களதிற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார்.







No comments