Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மதம் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை நாம் கட்டியெழுப்புவது அவசியம்



மதம் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை நாம் கட்டியெழுப்புவதின் ஊடாக நாட்டை சரியான பாதையை நோக்கி கொண்டுச் செல்ல முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சாசனாரக்ஷக சபையின் ‘யதிவர அபிமன் உபகார விழா – 2021’  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சாசனாரக்ஷன பல மண்டலயவின் கடமைகளில் ஈடுபட்டு, தமது சேவை காலத்தை நிறைவுசெய்து நான்கு ஆண்டு காலமாக அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக செய்த அர்ப்பணிப்பை பாராட்டுவது எமது கடமையும் பொறுப்பும் ஆகும்.

அவ்வாறு பாராட்டுவதற்கான சந்தர்ப்பமாக இத்தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். உண்மையில் அறநெறி பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிப்பது அதற்கான எவ்வித வேதனங்களும் இன்றியாகும்.

இக்கடமையில் ஈடுபடும் பலரும் வாரத்தில் ஐந்து தினங்களும் பாடசாலைகளில் பணியாற்றும் அதேவேளை தமது விடுமுறை தினத்தில் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.இதனை நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊக்குவிக்க வேண்டும்.

அறநெறி பாடசாலைகள் மூலம் குழந்தைகளை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் சிறைச்சாலைகளைப் பார்த்தால், பெரும்பாலான சிறைச்சாலைகள் ஒருபோதும் அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத மக்களாலேயே நிரம்பியுள்ளன.

அறநெறி பாடசாலைக்கு செல்லும்போது பிள்ளைகள் ஒழுக்கமுடையவர்களாகவும் மதம் மீதான ஈர்ப்பை கொண்டவர்களாகவும் மாறுவதுடன், இது சமுதாயத்தில் ஒழுக்கத்தை உருவாக்குகிறது என்ற நம்பிக்கையில்தான் ஒரு நாட்டை நீதியுள்ள சமூகமாக கட்டியெழுப்ப முடியும்.

அறநெறி பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு மஹா சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் செய்யும் அர்ப்பணிப்பை நாம் எப்போதும் பாராட்டுகிறோம்.

ஒரு மாவட்டம், ஒரு மாகாணம் மற்றும் ஒரு நாட்டிற்குள் மதம் மீது ஈர்ப்பு கொண்ட மக்களை நாம் கட்டியெழுப்புவோமாயின், அந்த மாவட்டம், மாகாணம் அல்லது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் திறன் நமக்கு உண்டு.

அதனால் அறநெறி பாடசாலைகளிலோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது பௌர்ணமி நாட்களிலோ நாம் அனைத்து மதங்களிலும் மத நடவடிக்கைகளை மேற்கொண்டால், மக்களை அவ்வழியில் வழிநடத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். சிறைச்சாலைகள் நிரம்புவது நிறுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments