இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும், தற்போது புதிய பாதிப்பு 12 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
*நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,831 பேருக்கு தொற்று உறுதி, இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,38,194 ஆக அதிகரித்துள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 84 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,080 ஆக உயர்ந்துள்ளது.
*தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,904 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,05,34,505 ஆக உயர்ந்துள்ளது.
*இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,48,609 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*குணமடைந்தோர் விகிதம் 97.20% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.43% ஆக குறைந்துள்ளது.
*சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.37% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் ஒரே நாளில் 5,32,236 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
*இதுவரை 20,19,00,614 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
*இதுவரை 58,12,362 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது









No comments