Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானம் இன்று


தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக சம்பள நிர்ணய சபையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட முதலாளிமார் சம்மேளத்தின் சார்பில் 08 பேரும், தோட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 08 பேரும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 03 பேரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக கௌரவ பிரதமர் வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழிவை மேற்கொண்டார். இதற்கமைய தோட்ட நிர்வாக கம்பனிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை தொழில் அமைச்சர் நடத்திய போதும் சுமுகமான தீர்வை எட்ட முடியாமல் போனது. இதன் காரணமாக அமைச்சரவை மூலம் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான விடயத்தை சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்த அவர் இதன் அடிப்படையில் இன்றைய தினம் தேயிலை, இறப்பர் தொடர்பான சம்பள நிர்ணயசபை இன்று கூடுவதாக தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் தலைவராக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி மேலும் தெரிவிக்கையில்இ நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தோட்ட நிர்வாக கம்பனிகள் உடன்பாடு தெரிவித்த போதும் அதற்காக அவை முன்வைத்த நிபந்தனைகளை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிகாட்டினார்


No comments