Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீண்டும் திரைக்கு வரும் உலகம் சுற்றும் வாலிபன்



 மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகியிருந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்  இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். விஞ்ஞானியான முருகன் மின்னலை பிடித்து அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின் ‘பார்முலா’வை வில்லன் கூட்டம் அபகரிக்க முயற்சி செய்யும்.

இதை விஞ்ஞானியின் தம்பியும் புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எதிரிகளின் சதித்திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை.

விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிடவுள்ளதுடன், தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.

No comments