Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிரி மஹ மிஹிந்து பிரிவேனாவில் தமிழ் மொழி தின விழா


வாத்துவ சமுத்திராராமயவில் அமைந்துள்ள சிரி மஹ மிஹிந்து பிரிவேனாவில் இடம்பெற்ற தமிழ் மொழி தின விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கலாநிதி சுரேன் ராகவன் இன்று (10) மாலை கலந்து சிறப்பித்தார். 

சிரி மஹ மிகுந்து  பிரிவேனாவில் கல்விகற்கும் பிக்கு மாணவர்கள் இந்த விழாவில்  பாடல்கள் உரை போன்றவற்றை தமிழ் மொழியில் ஆற்றினர். 

இந்த நிகழ்வில்  போபிட்டியே தம்மிச்சர நாயக்க தேரர் அவர்கள் மொழி என்பது கற்றுக் கொள்வதற்கானது என்பதை வலியுறுத்தியதுடன், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொண்டால் நம் நாட்டில் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழலாம் என்று கூறியதுடன் அதற்காக பிரிவேனாவில் கற்கும் பிக்கு மாணவர்களும் தமிழை நன்றாக கற்கவேண்டுமென்றும் தெரிவித்தார். 

இதேவேளை, தர்மத்தின் ஊடாக எல்லா விதமான சவால்களையும் வெற்றி கொள்ளலாமென குறிப்பிட்ட கலாநிதி ராகவன் , நம்நாட்டுக்கு தற்போது  சேவை மனப்பாங்குள்ள பிக்குகளே அவசியமென்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன்  சிங்கள பிக்கு மாணவர்கள் கல்வி கற்கும் பிரிவேனாவில் தமிழ் மொழி தின விழாவை ஏற்பாடு செய்திருப்பதையும் வெகுவாக பாராட்டினார்.


No comments