Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்!



அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகைகளான மீனா மற்றும் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் நடிகர்களான சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு, கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக இரத்து செய்தனர்.

இதனால் ரஜினி உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது, அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவதுடன், ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments