பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை ஆயர் இல்லத்தில் இன்று ( 13) முற்பகல் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது மன்னார் மக்களின் பொருளாதார நிலையினை எவ்வாறு உயர்த்தலாமென்றும் இந்தியாவுக்கும் தலைமன்னாருக்குமிடையில் கப்பல் சேவையைப் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீண்டும் அழைத்து வருவதில் கத்தோலிக்க திருச்சபையின் உதவிகள் தொடர்பாகவும் மன்னாரிலுள்ள கனிய வளங்களை பாதுகாப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
அத்துடன் மன்னார் மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது
வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் நியமிக்கப்பட்டதன் பின்னரான முதல் சந்திப்பு
இதுவாகும்
No comments