Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் சிரேஷ்ட தலைவர்!



ராஜபக்ஷ குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு தரப்புகளும் முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மஹிந்த ராஜபக்ஷ என்பவர், எமது நாட்டில் மாத்திரமல்ல முழு ஆசியாவையும் எடுத்துக்கொண்டால், அவரே சிரேஷ்ட தலைவர் என்பது எமக்கு தெரியும். அவர் அரசியல் அனுபவமிக்கவர். அவரது தலைமைத்துவத்திடம் எந்த தலைவரும் நெருங்க முடியாது.

அத்தோடு எமது வெற்றியில் பிரதான சாதகம் மஹிந்த ராஜபக்ஷ என்ற கதாபாத்திரம்தான். அத்துடன் பசில் ராஜபக்ஷ கட்சியை உருவாக்கி, அரசாங்கத்தை ஏற்படுத்தவும் வெற்றியை பெறும் சூழ்நிலையையும் நாட்டில் உருவாக்கினார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படியான இரண்டு தலைவர்களுடன் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல எனக்கு மிகவும் இலகுவாக இருக்கின்றது” என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் 

No comments