Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

7ஆவது நாளாக தொடரும் போராட்டம் - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கவலை!


கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தம்மை அரச கட்சி பிரதிநிதிகள் , அதிகாரிகள் எவரும் தம்மை நேரில் சந்திக்க வரவில்லை என வடமாகாண சுகாதார தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக இன்றும் தொடர்கின்றது.


கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவித்தனர்   

No comments