யாழ்ப்பாணத்தில் மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 429 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 20 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் 81 வயது பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 நோயினால் 12ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நால்வருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் வைத்தியசாலை சுயதனிமைப்படுத்தல் விடுதியிலும் ஒருவர் வெளியாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்.
முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
No comments