மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
மக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படுள்ள நிலையில் இன்றைய தினம் மதியம் இரண்டு மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு மாலை மூன்று மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கருப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. www.tamilnews1.com
ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றியசேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்றைய தினம் தமிழர்தேசம் எங்கும் தமிழ்தேசிய துக்க தினமாக பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள் அறிவித்திருந்தன. www.tamilnews1.com www.tamilnews1.com
வடக்கு கிழக்கு மக்கள் இன்றைய தினம் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புகொடிகளை பறக்கவிட்டும், உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். www.tamilnews1.com www.tamilnews1.com
No comments