யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , மாவட்ட செயலகமும், இணைந்து வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நடாத்தும் பண்பாட்டு விழா மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் . மாவட்ட செயலக முன்னாள் செயலர் இமல்டா சுகுமார் கலந்துகொள்ளவுள்ளனர்.
பண்பாட்டு ஊர்வலத்துடன் நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெறும். அத்துடன் "யாழ்ப்பாணம்" நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.
No comments