யாழ். நகர் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் சோபையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக புடவை விற்பனை நிலையங்கள் பல இரண்டு வாரங்களாக மூடபட்டிருந்தன. www.tamilnews1.com
எனினும் கடந்த வாரம் வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்ட போதும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் அவர்களின் கடைகளைத் திறக்க அனுமதிவில்லை. www.tamilnews1.com
இந்நிலையில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ். மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அச்சநிலை காரணமாக யாழ். மாநகரில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு புடவை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடைபாதை வியாபாரம் ஏராளமாக இடம்பெறுகின்றன.அதனால் யாழ்ப்பாணம் மாநகரில் புத்தாண்டு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறு வர்த்தக நிலையங்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர். www.tamilnews1.com
No comments