நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இன்றைய தினம் விபத்துக்குள்ளான நிலையில் அவரது விபத்துக்குள்ளான வாகனத்தின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளானது.
நீதிமன்ற தடைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றில் நடைபெறவிருந்த நிலையில் குறித்த வழக்குக்கு முன்னிலையாவதற்காக கல்முனை நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம்பெற்றது. www.tamilnews1.com
குறித்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காயங்களுக்கு உள்ளாகவில்லை. அதானல் அவர் மாற்று வாகனத்தில் கல்முனை நோக்கி பயணித்திருந்தார்.
கல்முனை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com













No comments