Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒரே நாளில் மீட்ட பொலிஸார்!


மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று ஒரு நாளில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மருதனார்மடம் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  முற்பகல் 11 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளை (வெகோ) வீதியில் நிறுத்திவைத்து விட்டு அதன் உரிமையாளர்,
கடைக்குச் சென்றுள்ளார்.

கடையிலிருந்து திரும்பிய போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதுதொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸின் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உரும்பிராயில் கைப்பற்றப்பட்டது. அதனைத் திருடிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

No comments