நயினாதீவு நாக விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜையும் , மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
படங்கள் :- Nainativu Expressnews
மத வழிபாட்டு இடங்களில் 50க்கும் குறைவானவர்களே அனுமதிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களும் குறித்த சித்திரை பௌர்ணமி விசேட பூஜை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை கடந்த 24ஆம் திகதி நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாயத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அ .பத்திநாதன் , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஈ.இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கூடினார்கள் என ஆலய தலைவர் , செயலாளருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
No comments