Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, July 20

Pages

Breaking News

யாழ்.மாநகர முதல்வர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படுகிறார்?

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்திற்கு மீள அழைத்து வரப்படுவதாக அறியமுடிகிறது. www.tamilnews1.com 

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு வாக்கு மூலம் வழங்க வருமாறு முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.  www.tamilnews1.com 

பொலிஸ் நிலையத்தில் சுமார் 06 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.   www.tamilnews1.com 

இந்நிலையில், இன்று மதியம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்து்ச செல்லப்பட்ட மணிவண்ணனுக்கு சட்ட வைத்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.  www.tamilnews1.com 

அதேவேளை, அவரைச் சந்திப்பதற்காக வவுனியா சட்டத்தரணிகள் சிலர், மணிவண்ணன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு முன்பு கூடியிருந்தனர்.  www.tamilnews1.com 

எனினும், அவர்களுக்கு அனுமதிக்கப்படாத போதும், மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரனுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கணினி உட்பட்ட சில பொருட்களும் குறித்த பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  www.tamilnews1.com 

இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மணிவண்ணன் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படுவதாக அறியமுடிகிறது.