மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளது
கொரோனோவால் மேலுமொரு யாழ் வாசி மரணம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments