மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆண்டகையின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இன்று பிற்பகல் வரை வைக்கப்பட்டிருந்தது.
ஆயரின் திருவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, ஆயரின் திருவுடல் பேராலயத்திற்குள் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.இதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆயரின் திருவுருவச்சிலை இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81ஆவது வயதில் கடந்த முதலாம் திகதி நித்திய இளைப்பாறினார்.

















No comments