யாழில்.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலங்கள் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. www.tamilnews1.com
யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 77 வயதானவர் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் பகுதியை சேர்ந்த 59 வயதானவரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். இவரும் யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
இருவரின் சடலங்களும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது.
No comments