Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்!


கொரோனா தொடர்பில்  மக்கள்  விழிப்புணர்வுடன்  செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

 யாழ் மாவட்ட கொரோனா  நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை  நடாத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வட மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகின்றது. அதேபோல யாழ்  போதனா வைத்தியசாலையில் நேற்றும் இன்றும் ஆக இரண்டு மரணங்கள்  கொவிட் தொற்று காரணமாக  ஏற்பட்டிருக்கின்றது. அதில் நேற்று 77 வயதும், மற்றவர் இன்று காலை 59 வயதான ஒருவரும் மரணமானார்கள். அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்து, யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட பிரிவில் தகுந்த கண்காணிப்புடன் இருந்தவர்கள். அவர்கள் கொவிட் தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளனர். 

எனவே, கொரோனா தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மிக அத்தியாவசியமாக காணப்படுகின்றது. அந்த வகையில் நமது வைத்தியசாலையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம். உதாரணமாக இப்பொழுது நமது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பெறுபவர்களுக்கு, சத்திரசிகிச்சை கூடத்திற்று செல்வோர்  அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்த பின்புதான் அவர்களை சத்திர சிகிச்சைக்கான அனுமதிக்கின்றோம்.


 அதேபோல விபத்து  பிரிவில் வருபவர்கள் உடனடியாக சத்திரசிகிச்சை  செய்ய வேண்டி இருப்பின், அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சிகிச்சைக்காக அனு மதிக்கின்றோம். அந்த வகையில் தினமும் 75 தொடக்கம் 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

அதேபோல் நாளாந்தம் 400 பேருக்குரிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அத்தோடு எமது வைத்தியசாலையில் விடுதிகளில் 5 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்து இருக்கின்றோம்.

இதன் மூலம் நமது வைத்தியசாலையை  கொரோனா  தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கின்றோம். பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக இருக்கின்றது.

பொதுவாக நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கையினை குறைந்து இருக்கின்றோம். அதற்கு மக்கள் தமது கணிசமான ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள்.

மேலும்  இன்னும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. வைத்தியசாலை ஒரு முக்கியமான இடம் இவ்வாறான இடத்தில் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை  எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார். 

No comments