Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் உடும்புகளை வேட்டையாடியவர் கைது; ஐந்து உடும்புகள் உயிருடன் மீட்பு!

கிளிநொச்சி காட்டு பகுதியில் உடுப்புகளை இறைச்சிக்காக வேட்டையாடி வைத்திருந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com 

வட்டக்கச்சி , இராமநாதபுரம் – புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிகாக  நபர் ஒருவர் வீட்டில் வைத்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் ஐந்து உடும்புகளையும் உயிருடன் மீட்டதுடன் , வேட்டையாடிய நபரையும் கைது செய்தனர்.  www.tamilnews1.com 

கைது செய்யப்பட்ட நபரையும் , அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஐந்து உடும்புகளையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அதிகாரிகள் முற்படுத்திய போது , நீதவான் கைது செய்யப்பட்ட நபரை ஒரு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவித்ததுடன் , மீட்கப்பட்ட உடும்புகளை காட்டினுள் விடுமாறு பணித்ததுடன் வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  www.tamilnews1.com 

நீதிமன்ற பணிப்பின் பிரகாரம் ஐந்து உடும்புகளையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் காட்டு பகுதியில் விடுவித்தனர்.  www.tamilnews1.com 

No comments