Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

14நாள் பயணத்தடை நீடிப்பு ; 3நாட்கள் மாத்திரமே தடை தளர்த்தப்படும்!




தற்போது நடைமுறையில் உள்ள பயண தடை எதிர்வரும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் , மூன்று நாட்கள் மாத்திரம் தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com 

தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை நாளைய தினம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 11 மணிக்கு அமலுக்கு வரும்.  www.tamilnews1.com 

நாளைய தினம் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு அமுலுக்கு வரும் பயண தடை தொடர்ந்து அமுலில் இருந்து எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு அமுலுக்கு வரும். 

31ஆம் திகதி இரவு 11 மணிக்கு அமுலுக்கு வரும் பயண தடை எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை வரையில் அமுலில் இருக்கும். அன்றைய தினம் அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். 

4ஆம் திகதி இரவு 11மணிக்கு  அமுலுக்கு வரும் பயண தடை எதிர்வரும் 7ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும். 

பயண தடைகள் அமுலில் உள்ள நாட்களில் அவசர மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மாத்திரமே வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் , பயண தடை தளர்த்தப்படும் நாட்களில் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

No comments