Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவில் கடற்படை வாகனம் மோதி மாணவன் படுகாயம்; விசாரனைக்கு பின்னடிக்கும் பொலிஸ்!


யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் கடற்படையினரின் தண்ணீர் பவுசருடன் மாணவன் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என விபத்துக்கு உள்ளான மாணவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த 24ஆம் திகதி நன்பகல்  நடைபெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் ந. கவிப்பிரியன் (வயது 15) எனும் மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த விபத்து சம்பவத்தை அடுத்து மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள பொலிஸார் , கடற்படையினரின் தண்ணீர் பவுசர் சாரதியான கடற்படையை சேர்ந்தவரை கைது செய்யவில்லை எனவும் , அவர்களின் வாகனத்தை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லவில்லை எனவும் , உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் மாணவனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 

No comments