Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பி.சி.ஆர். பரிசோதனைக்கு வருவோரை திருப்பி அனுப்பினால் நடவடிக்கை - இராணுவ தளபதி எச்சரிக்கை!


பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வருவோரிடம் மாதிரிகளை பெறாது திருப்பி அனுப்பினால் , சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதியும் , கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்திய சாலை ஒன்றுக்கு சென்ற நபர் தனக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படுவதாகவும் , அதனால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார். www.tamilnews1.com 

அவ்வேளை கடமையில் இருந்த வைத்தியர் கொரோனா தொற்றாளர்கள் எவருடனும் முதல் நிலை தொடர்பில் இல்லாததால் , பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை என கூறியுள்ளார். www.tamilnews1.com 

இருந்த போதிலும் வைத்திய சாலைக்கு சென்றவர் , தனக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுகின்றன என கூறி யமையால் , வேறு வழியின்றி பி.சி. ஆர். பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்று  பரிசோதனைக்கு அனுப்பிய போது , அவருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. 

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

மேலும் தெரிவிக்கையில் , www.tamilnews1.com 

பி.சி.ஆர் பரிசோதனைக்காக வருவோரை திருப்பி அனுப்ப கூடாது , அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றால்  சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பி.சி. ஆர் சோதனைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். 

நாடு முழுவதிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவுள்ளோம். அதேவேளை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்தார். www.tamilnews1.com 

No comments