Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கையில் ஐ.பி.எல் போட்டி?


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த முடியும் எனவும் இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்துவதற்காக மைதானங்கள் தயாராகிவிடும் என்றும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் அர்ஜூன டி.செல்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.பி.எல். தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இருப்பதாக அறிந்ததாகவும் ஆனால், அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையை புறக்கணித்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டும் கொரோனா நிலைமையை அடுத்து ஐ.பி.எல். தொடரை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தபோதும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அந்த வாய்ப்பை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments