ஆதி எம் கிரியேசன்ஸ் சார்பில் பிரணவனின் தயாரிப்பில் மதி சுதாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் ‘கலியாணக்கரகம்’ .
நம் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனப்பிரச்சனை + பெண்ணைப் பெற்ற குடும்பங்கள் அதற்காக படும் பாடு பற்றி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் இப்பாடலை உமாகரன் ராசையாவுடன் மதன் சி எழுதியுள்ளார். பாடலை ஹரி தேவாவுடன் இணைந்து மதன் சி பாடியும் உள்ளார்.
ஜொனாவின் இசையில் உருவான இப்பாடலை மதிசுதா அழகாக இயக்கியுள்ளார். காணி, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் என பலதை விற்று தன் தங்கையை Bsc படித்த மாப்பிள்ளைக்கு திருமணம் முடித்துக் கொடுக்கிறார். இந்த கிரகம் பிடித்த சீதனம் தேவையில்லாத ‘கலியாணக்கரகம்’ என பாடலூடே சொல்ல விளைகிறார். ஆனாலும் இந்தக் கரகத்தை பல குடும்பங்களும் தலையில் இருந்து இறக்க முடியாமல் தான் திண்டாடுகிறது.
பாடலில் காட்சிகளை அற்புதமாக படப்பிடிப்பு செய்து மேலும் பாடலுக்கு வலு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.கே.கமல்.
மதிசுதா, மதன் சி, தரு, வஜி, ரங்கன், ரதீஸ், சசிக்குமார், சேகர், அம்பிகை ஆகியோர் நடித்துள்ளனர்.









No comments