கோப்பு படம்.
அமைச்சர் நாமல் ராஜபக்சே நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் , தடுப்பூசி ஏற்றும் பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். www.tamilnews1.com
யாழ்.போதனா வைத்திய சாலையில் நாளை காலை 08 மணிக்கு தடுப்பூசி ஏற்றும் பணியை ஆரம்பித்து வைக்கவுள்ள நாமல் , தொடர்ந்து வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதி உள்ளிட்ட வைத்திய சாலை நிலைமைகளை நேரில் ஆராயவுள்ளார். www.tamilnews1.com
நாளைய தினம் 61 கிராம சேவையாளர் பிரிவில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெறவுள்ள நிலையில் 10 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை அவதானிப்பார் எனவும் , பிராந்திய வைத்திய சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. www.tamilnews1.com









No comments