Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இயந்திர பாவனையின் ஊடாக நஞ்சற்ற நெல் உற்பத்தி (காணொளி இணைப்பு)


நெல் நாற்று மேடை அமைத்து,  பராமரித்து,  வயல்களில் இயந்திரங்களின் மூலம் நடவு செய்து, எந்திரங்களின் மூலம் ரசாயனங்கள் இன்றி இங்கு களைகள் அகற்றப்படுகின்றது.

நெற் செய்கையில் களை நாசினி நஞ்சு பாவனையை இல்லாமல் செய்வதற்காகவும், பூச்சி நாசினி நஞ்சுகளை குறைப்பதற்காகவும் பயிர் செய்கை செலவுகளை குறைத்து, விளைச்சலை அதிகரித்து, லாபத்தை அதிகரிக்கவும் யப்பானிய டபொக் முறையிலான நாற்று நடுதல் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இலங்கையிலும் இம்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் வேலையாட்கள் பிரச்சனை காரணமாக பெரிய அளவில் விவசாயிகள் இம்முறையை பின்பற்ற முடியவில்லை.

மேற்கண்ட இடர்பாடுகளை அவதானித்த அக்ரி டாஸ் போஸ் (Agri Task Force) பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒருங்கிணைந்த பொதியாக மேற்படி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இம்முறையில் நெல் இனத்தை விவசாயி தெரிவு செய்தால் போதுமானது. ( விவசாயி தனது விதை நெல்லையும் வழங்க முடியும்) நாற்றுமேடை தயாரிப்பு, பராமரிப்பு, அவரவர்களுக்கான போக்குவரத்து, வயல்களில் நடவு செய்தல், களை அகற்றுதல் என அனைத்து வேலைகளையும் அந் நிறுவனம் கவனித்துக் கொள்ளும். இத்திட்டத்தில் விவசாயின் பங்களிப்பாக இயந்திரம் மூலம் நடவு கேற்றவாறு நிலத்தைப் பண்படுத்தி தருதல் போதுமானது.

அத்துடன் இத்திட்டத்தில் நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு , பூச்சி நாசினி , பரிபாலனம் போன்ற வேலைகள் உள்ளடக்கப் படவில்லை.

நெல் விதைப்பது கருவியினால் நெல்லை வரிசையில் விதைத்த பின்பு புல்லு மருந்து பாவனையே இல்லாமல் செய்வதற்காக வரிசைகளில் களை எடுப்பான் கருவியினால் களைகளை அகற்ற முடியும்.

இக்கருவியின் ஐ பயன்படுத்தும் பொழுது செலவு இன்னும் குறைகிறது அதாவது ஏக்கருக்கு 11000 - 13000 LKR போதுமானது.

No comments