மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க வீதியை சேர்ந்த பரமேஸ்வரன் தனுஜன் (வயது 31) மற்றும் தெகிவளையை சேர்ந்த துரைசிங்கம் வினோகா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.









No comments