Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வீசும் காற்றினால் 46குடும்பங்கள் பாதிப்பு!


யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். www.tamilnews1.com 

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,  www.tamilnews1.com 

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு
இதில் குழந்தை ஒன்று காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடுங்காற்றின்  தாக்கத்தின் காரணமாக இரண்டு வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளதோடு  42 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன்  சிறு தொழில்  முயற்சியாளர்கள் ஐந்து பேர்  காற்றின்  தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  www.tamilnews1.com 

குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த  முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவு  பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com 

No comments