Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாட்டில் இராணுவத்தினர்!


யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு இன்றையதினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. 

தென்மராட்சி பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி ,சந்தை கடைத்தொகுதி மற்றும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் ராணுவத்தினரால் குறித்த பகுதிகள் நீர் ஊற்றி  சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலில் ராணுவத்தின் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை  அதிகாரியின் நெறிப்படுத்தலில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments