கோப்பு படம்.
யாழ்ப்பாணம் வவுனியாவிற்கு இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் பயணித்தவருக்கு மீதி பணம் வழங்காது, தகாத வார்த்தைகளினால் பேசி அச்சுறுத்தியதாக, பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். www.tamilnews1.com
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, www.tamilnews1.com
இன்று மாலை 3.50 மணிக்கு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து பயணியொருவர் பயணித்துள்ளார். www.tamilnews1.com
இவர் பேருந்து கட்டணமாக 260 ரூபாவுக்கு 1000 ரூபா தாளை கொடுத்துள்ளார். இதன்போது நடத்துனர் மீதிப் பணமாக 235 ரூபாவை கொடுத்துவிட்டு மீதி 500 ரூபா பின்பு தருவதாக கூறியுள்ளார். www.tamilnews1.com
எனினும் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு மூன்று முறை மீதிப் பணத்தை கேட்ட போதும் பின்பு தருவதாக கூறியுள்ளார். www.tamilnews1.com
இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்பு, மீதிப் பணமாக 5 ரூபாவை கொடுத்துள்ளார். இதன்போது அப் பயணி மீதிப் பணம் 505ரூபா தர வேண்டும் என கேட்ட போது, அதற்கு நடத்துனர் இல்லை, 5 ரூபா தான் தர வேண்டும், நீ 500 ரூபா தான் கொடுத்தாய் என அச்சுறுத்தும் தொணியில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பயணியும் தான் 1000 ரூபாவே கொடுத்ததாகவும், மீதிப் பணம் 500 ரூபா தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு சாரதியும் நடந்துனரும் இணைந்து, பயணியை அச்சுறுத்தியுள்ளார். www.tamilnews1.com
பணத்தை தராவிட்டால் என்ன செய்வாய் ? பொலிஸ்க்கு செல்வது என்றால் செல் எனவும் அச்சுறுத்தியுள்ளனர். www.tamilnews1.com
எனினும் தொடர்ச்சியாக பயணி மீதிப்பணத்தை தராவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூற, பயணியின் பேருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு மீதிப் பணத்தை கொடுத்துவிட்டு அவரை தூசன வார்த்தைகளில் பேசியுள்ளனர். www.tamilnews1.com
இதேவேளை இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும், அவற்றை கேட்கப்போனால் நடத்துனர்கள் அச்சுறுத்துவதாகவும் ஏனைய பயணிகளும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். www.tamilnews1.com









No comments