Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரத்தினபுரியில் பேருந்து விபத்து – 15 பேர் படுகாயம்: இருவர் கவலைக்கிடம்


இரத்தினபுரி – நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும் பேருந்தே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிடிவல மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments