Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.நகரில் திருட்டில் ஈடுபட முனைந்த இருவர் கைது!


நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் இருக்கும் போது , யாழ்.நகர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திருட முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கடையின் பின் பகுதி வழியாக திருடர்கள் இறங்கி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக , யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கடைக்கு அவர்கள் விரைந்துள்ளனர். www.tamilnews1.com 

அவர்களை கண்டதும் திருட்டில் ஈடுபட்ட இருவரும் தப்பியோடிய போதிலும் , அவர்களை துரத்தி சென்று புலனாய்வாளர்கள் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டனர்.   www.tamilnews1.com 

கைது செய்யப்பட்டவர்கள் பொற்பதி மற்றும் நாவாந்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , இருவரும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  www.tamilnews1.com 

www.tamilnews1.com 

No comments