பயங்கரவாதத்தை மீள் உருவாக்கும் வகையில் செயற்படாமலும் , சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் பிரிவுகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை பரிசீலித்த நீதவான் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து கட்டளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் , குறித்த கட்டளைக்கு எதிராக நகர்த்தல் பாத்திரம் அணைத்து , விண்ணப்பம் செய்தனர். அதனை அடுத்து, நீதவான் பயங்கரவாத செயற்பாடுகள் மீள் உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது , சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கினார்.









No comments