முகக்கவசம் அணியாமல் சக்கர வண்டியில் பொருள்களை எடுத்துச் சென்ற நபர் தொடர்பில் இன்று சமூக ஊடகங்களில் பரவிய காணொலியை ஆதாரமாகவைத்து தர்கா நகரைச் சேர்ந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவரை அலுத்கம பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
சந்தேக நபர் முகக்கவசம் அணியாமல் பல்பொருள் அங்காடியைவிட்டு வெளியேறி வருவதாகவும், அவர் பொருள்களுடன் ஒரு சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகவும் காணொலியில் காட்டுகிறது. www.tamilnews1.com
தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தார். www.tamilnews1.com









No comments