Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழகத்தில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஒரேநாளில் தொற்றாளர்கள் கண்டறியப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதன்படி, இன்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 764 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாத்திரம் இன்று மூவாயிரத்து 561 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 19 இலட்சத்து 45 ஆயிரத்து 260 பேருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று மட்டும் கொரோனா தொற்றினால் 475 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 21 ஆயிரத்து 815ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 29 ஆயிரத்து 717 பேர் கொரோனா தொற்றிலிருந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 13 ஆயிரத்து 221ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்னும் மூன்று இலட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, தமிழகத்தில் தீவிர கொரோனா பரவலைத் தொடர்ந்து அங்கு, முழு ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments