Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை!

 


இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தவறான பிரசாரங்கள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சகம், ஆயுதப்படைகள் மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளன என்றும் அவர் கூறினார்.

இலங்கையை 4ஆம் அடுக்கில் வைத்த அமெரிக்கா இலங்கைக்கு அமெரிக்கர்கள் யாரையும் பயணிக்க வேண்டாம் என்று கடந்த திங்கட்கிழமை அறிவுறுத்தியது.

கொரோனா நிலைமை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட பயண அறிவுறுத்தல் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறான தாக்குதல் அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என்றும் இலங்கை மக்கள் தேவையற்ற பீதிக்கு உள்ளாக வேண்டாம் என்றும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

No comments