Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜூன் முதல் பயணிகள் விமானசேவைக்கான தடை நீக்கம்


 எதிர்வரும் ஜூன்  மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கு வரும் பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த விமான பயணத் தடையை நீக்குவதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

எனினும்நாட்டுக்கு வரும் விமானங்களில் 75 பயணிகள் மாத்திரமே ஒரே நேரத்தில் வர முடியும் என்றும், அவ்வாறு வருபவர்கள் 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்றவர்களாக இருக்கக் கூடாது என்றும்  குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

மேலும், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தொடர்ந்தும் இந்த பயணத்தடை தளர்ததப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை வரும் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

No comments